பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தயார்..! நடக்காததை பேசிக்கொண்டிருக்காமல் மற்றய தமிழ் தரப்புக்களும் ஆதரவளிக்கவேண்டும் - டக்ளஸ்..

ஆசிரியர் - Editor I
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு வழங்க தயார்..! நடக்காததை பேசிக்கொண்டிருக்காமல் மற்றய தமிழ் தரப்புக்களும் ஆதரவளிக்கவேண்டும் - டக்ளஸ்..

நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயங்களை பேசிக் கொண்டிருக்காமல் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசுக்கு தமிழ் தரப்புக்கள் ஆதரவளிக்கவேண்டும். என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கூறியுள்ளார். 

ரணில் விக்கிரமசிங்க பிரதமராக  பதவியேற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து ஊடகங்களுக்கு அனுப்பியுள்ள செய்தி குறிப்பிலையே அவ்வாறு தெரிவித்துள்ளார்.அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

நாட்டிற்கும் தமிழ் மக்களுக்கும் நன்மைகளை உருவாக்கக் கூடிய பிரதமரின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பினை வழங்கத் தயார். 

6 ஆவது தடவையாக நாட்டின் பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கு இருக்கின்ற அனுபவமும் சர்வதேச உறவுகளும் நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேற்கொண்டு வருகின்ற முயற்சிகளை இலகுபடுத்தும்.

அத்துடன், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக நடைமுறைச் சாத்தியமற்ற விடயங்களை பேசிக்கொண்டு இருக்காமல், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் உருவாகவுள்ள புதிய அரசாங்கத்திற்கு ஏனைய தமிழ் தரப்புக்கள் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.

உங்கள் முதுகுக்கு பின்னால் நான் நிற்கிறேன்.
இது கள்வர்கள், கயவர்கள் கவனத்திற்கு மட்டும்.. மேலும் சங்கதிக்கு

Radio