எனக்கு பெற்றோல் இல்லை என்றால் எவருக்கும் பெற்றோல் இல்லை..! யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் கட்டப்பஞ்சாயத்து...

ஆசிரியர் - Editor I
எனக்கு பெற்றோல் இல்லை என்றால் எவருக்கும் பெற்றோல் இல்லை..! யாழ்.நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பொலிஸார் கட்டப்பஞ்சாயத்து...

யாழ்.நகரில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்றில் பொதுமக்கள் பெற்றோலுக்கு காத்திருந்த நிலையில் தனக்கு பெற்றோல் தரவேண்டும். என அடம்பிடித்த பொலிஸ் உத்தியோகஸ்த்தர் ஒருவர் தனக்கு பெற்றோல் தராவிட்டால் யாருக்கும் பெற்றோல் கொடுக்ககூடாது என கூறி அங்கிருந்த பொதுமக்களை விரட்டியுள்ளார். 

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தொியவருவதாவது, எரிபொருள் நிரப்பு நிலையத்தில் மதியம் முதல் பெற்றோல் முடிவடைந்து விட்டதாக ஊழியர்கள் கூறிய போதிலும் ஒரு சிலருக்கு வழங்கப்பட்டது. 

அதனால் , அங்கு கூடிய சிலர் தமக்கும் பெற்றோல் தருமாறு கோரியபோது, யாழ்.போதனா வைத்திசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள் , தாதியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு மாத்திரமே வழங்குகின்றோம் என கூறியுள்ளனர். 

அதன்போது , அங்கு நின்று இருந்த சிலர், ஒரு வைத்தியசாலை ஊழியர் ஐந்திற்கும் மேற்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்து பெற்றோல் அடித்து செல்வதனை எவ்வாறு எம்மால் அனுமதிக்க முடியும் என கேட்டுள்ளனர்.

இந்நிலையில் அங்கு இரு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸார் தமக்கு பெற்றோல் நிரப்ப ஊழியர்களிடம் கேட்டபோது, அவர்களுக்கு பெற்றோல் வழங்க ஊழியர்கள் தயாரானபோதும் மணித்தியால கணக்காக காத்திருக்கும் 

எமக்கு பெற்றோல் இல்லை என கூறிய நீங்கள், பொலிஸாருக்கு பெற்றோல் வழங்க எங்கிருந்து பெற்றோல் வந்தது ? அவர்களுக்கு பெற்றோல் அடித்தால் எமக்கும் அடிக்க வேண்டும் என கோரினார்கள். 

இதனையடுத்து இரு பொலிஸார் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து சென்ற போதிலும் , ஒரு பொலிஸ் உத்தியோகஸ்தர் தனக்கு பெற்றோல் அடிக்க வேண்டும் என ஊழியர்களிடம் கண்டிப்பான குரலில் கூறினார். 

அங்கிருந்தவர்களின் குழப்ப நிலைமை காரணமாக ஊழியர்கள் அதற்கு தயங்கியபோது குறித்த பொலிஸ் உத்தியோகஸ்தர் " எனக்கு அடிக்க முடியாத பெற்றோல் இங்கே யாருக்கும் அடிக்க கூடாது" என கோபத்துடன் கூறி அங்கிருந்து சென்றார். 

பின்னர் ஒரு சில நிமிடத்தில் மேலதிக பொலிஸார் மற்றும் மோட்டார் சைக்கிள் மற்றும் ஜீப் வாகனத்தில் பொலிஸ் விசேட அதிரடி படையினரை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அழைத்துவந்த நிலையில், 

அங்குவந்த பொலிஸாரும், அதிரடிப்படையினரும் எவரும் பெற்றோல் விநியோகிக்க வேண்டாம் என ஊழியர்களுக்கு அறிவுறுத்தி , அங்கிருந்த பொதுமக்களையும் அப்புறப்படுத்தினார்கள். 

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு