யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த மற்றய அனைத்து சேவைகளும் தற்காலிகமாக நிறுத்தம்!
யாழ்.போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த மற்றய சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டிருப்பதாக யாழ்.போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் ஸ்ரீ பவானந்தராஜா கூறியுள்ளார்.
போதனா வைத்தியசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார். போதனா வைத்தியசாலையினை பொறுத்தவரை நோயாளர்களின் சிகிச்சைக்குரிய மருந்து
மற்றும் சத்திர சிகிச்சைக்கு தேவையான உபகரணங்களுக்கான மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்பொழுது போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே நடைபெற்றுவருகின்றது.
மற்றய சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது. மேலும் விசர்நாய் கடிக்கான மருந்து தட்டுப்பாடாக இருக்கிறது. எனவே பொதுமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம்.
விசர் நாய்க்கடி மருந்து என்பது ஒரு விலை உயர்ந்த மருந்துதாகும் எனவே அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்துடன் விபத்துக்கள் மற்றும் தேவையற்ற பிரச்சனைகள் மூலம்வைத்தியசாலைக்கு வருவதை தவிர்க்குமாறும் கோருகின்றோம்.
போதுமான அளவு சேவையினை வழங்க முடியாதுள்ளது என்பதை மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.