SuperTopAds

உக்ரேனுக்கு திடீர் விஜயம் செய்த பைடனின் மனைவி!!

ஆசிரியர் - Editor II
உக்ரேனுக்கு திடீர் விஜயம் செய்த பைடனின் மனைவி!!

அமெரிக்க நாட்டின் ஜனாதிபதி ஜோ பைடனின் மனைவி ஜில் படைன் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு உக்ரேனுக்கு சென்றுள்ளார். 

உக்ரேனின்  உஹோரோடா நகரத்தில், உக்ரேன் ஜனாதிபதி  ஜெலன்ஸ்கியின் மனைவி ஒலேனே ஜெலன்ஸ்கியை ஜில் பைடன் சந்தித்தார். 

ஒரு சிறிய வகுப்பறையில் இருவரும் நேர் எதிரே அமர்ந்தபடி சிறிது நேரம் பேசினர். பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில், 

'இந்த போர் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் என்பதை உக்ரேன் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டியுள்ளது. இந்த போர் கொடூரமானது. ஐக்கிய நாடுகளின் உறுப்பினர்கள் உக்ரேன் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்' என்றனர்.