வடமாகாண ஆளுநரின் ஒப்புதலுடனா யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை பொறுப்பேற்றார் கேதீஸ்வரன்? கிளம்பும் புதிய சர்ச்சை..

ஆசிரியர் - Editor I
வடமாகாண ஆளுநரின் ஒப்புதலுடனா யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பதவியை பொறுப்பேற்றார் கேதீஸ்வரன்? கிளம்பும் புதிய சர்ச்சை..

ஆளுநரின் ஒப்புதல் பெறாமல், வடமாகாண சுகாதார நியதிச்சட்டங்களை மீறியே யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக, வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் நேற்று வெள்ளிக்கிழமை கடமையேற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் அறியமுடிந்ததாவது, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக இடமாற்றத்தின் அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டு நேற்று தனது பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளார். 

வைத்தியர்களுக்கான பணி இடமாற்ற உத்தரவு மத்திய சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டாலும் கூட 13ம் திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அதன் கீழ் உருவான மாகாணசபையின் முதலமைச்சரிடம் அல்லது அவர் இல்லாதவிடத்து மாகாண ஆளுநரிடம் சம்மதம் பெறப்படவேண்டும். 

அதன் பின்பே இடமாற்றத்தின்மூலம் வழங்கப்பட்ட நியமனத்தை பொறுப்பேற்க முடியும். குறித்த விடயம் மாகாண சுகாதார அமைச்சு நியதிச்சட்டங்களில் தெளிவாக வரையறுக்கப்பட்டிருக்கின்றது. அதாவது பணி இடமாற்றத்தை மத்திய அரசாங்கமே வழங்கியிருந்தாலும் கூட, 

அதற்கான ஒப்புதல், மேலதிக நேர கொடுப்பனவு, போக்குவரத்து கொடுப்பனவு உள்ளிட்ட பலவற்றை மாகாணசபை ஊடாகவே செய்யமுடியும். இந்நிலையில் மாகாண சுகாதார பணிப்பாளரான கேதீஸ்வரன் எவ்வாறு நியமனத்தை பொறுப்பேற்பார்? சுகாதார அமைச்சின் செயலாளர் ஊடாக ஆளுநரின் ஒப்புதல் பெறப்பட்டதா? என சந்தேகம் எழுகின்றது. 

இதற்கிடையில் யாழ்.மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை நிலையங்களில் இடம்பெற்ற பல குழறுபடிகள் தொடர்பாக பிரதமர் விசாரணை நடத்துமாறு வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜாவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். 

இதனடிப்படையில் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரனை கொழும்புக்கு விடுவிக்க ஆளுநர் நடவடிக்கை எடுப்பதாக அறிய முடியும் நிலையில் ஆளுநர் நாட்டில் இல்லாத சமயம் பார்த்து தானாக பதவியில் குந்திக்கொண்டாரா? என்ற கேள்வி எழுகின்றது. 

மேலும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளராக கடமையாற்றிய வைத்திய கலாநிதி கேதீஸ்வரனின் பணியிட மாற்றத்துக்கு வடமாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அனுமதி மறுத்த நிலையில் வடக்கு மாகாண பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராகவும் 

யாழ்.போதனா வைத்தியசாலையின் தற்போதைய பணிப்பாளரான வைத்தியர் நந்தகுமாரே பணி விடுவிப்பு வழங்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளராக உள்ள ஒருவர் எவ்வாறு பணி விடுவிப்பை வழங்குவது என்ற நிர்வாக குழப்ப நிலையும் உள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு