பதவி விலகுகிறாரா புதின்? -அமெரிக்கா தகவல்-
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதின் தனது பதவியை துறக்க உள்ளதாக அமெரிக்க ஊடகங்களில் வெளியிட்டுள்ள செய்திகளில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புதினுக்கு புற்றுநோய் அறுவை சிகிச்சை செய்யப்படலாம் என்றும், இதனால் ஆட்சி அதிகாரம் அந்நாட்டு பாதுகாப்பு கவுன்சில் செயலாளரான நிகோலாய் பட்ருஷேவ்விடம் தற்காலிகமாக ஒப்படைக்கப்படும் என்றும் அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியாகி இருக்கின்றன.
இந்நிலையில் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளதால், குறுகிய காலத்திற்கு அவரின் ஆட்சி செயலிழக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.