நடிகை ஏஞ்சலினா ஜோலி உக்ரைனுக்கு திடீர் விஜயம்!! -காயமடைந்த குழந்தைகளுடன் கொஞ்சி மகிழ்ந்தார்-
ஐக்கிய நாடுகள் சபையின் புலம்பெயர் மக்கள் பிரிவின் சிறப்பு தூதராக உள்ள ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி யுத்தத்தால் பாதித்த உக்ரைன் நாட்டிற்கு திடீர் பயணம் மேற்கொண்ட அங்குள்ள குழந்தைகளிடம் பேசி உற்சாகமூட்டியுள்ளார்.
இத்தகவலை லீவ் பிராந்திய ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார். இது குறித்து ஏஞ்சலினா கூறியதாவது:-
உக்ரைனில் உள்ளவர்களின் அதிர்ச்சியை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. குழந்தைகள் சந்திக்கும் வலியை நான் உணர்கிறேன். யாராவது அவர்களை தேற்றினால் அது அவர்களுக்கு மேம்பட்ட உணர்வை தரும் என்றார்.