முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தனித்து நடாத்துவது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை தனித்து நடாத்துவது தொடர்பில் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துரையாடல்..

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் பேரழுச்சியுடன் நடத்துவது குறித்து கலந்துரையாடும் கூட்டம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட போதும் அங்கு நடத்த பல்கலைக்கழக நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

இந்த தகவலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் தெரிவித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைமையில் பேரழுச்சியுடன் நடத்துவது  தொடர்பில்  கலந்துரையாடல் இன்று (11) வெள்ளிக்கிழமை  காலை 10.30 மணியளவில் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் என பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அறிவித்தது.

இதில் பல்கலைக்கழக அனைத்துப்பீடங்களின் மாணவர் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், தொழில்நுட்ப கல்லூரிகளின் மாணவ பிரதிநிதிகள் மற்றும் கோப்பாய் மற்றும் பலாலி ஆசிரியர் கலாசாலை மாணவ பிரதிநிதிகளும், கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொள்வார் என ஒன்றியம் குறிப்பிட்டது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் கூட்டத்தை நடத்த நிர்வாகம் அனுமதி மறுத்ததால், அதனை திருநெல்வேலியிலுள்ள தனியார் விடுதியில்  நடத்தப்படுகிறது.


பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு