355 பேருக்கான ஆசிரியர் நியமனம் எமக்கு கிடைத்த வரப்பிரசாதம்! கல்வி அமைச்சின் செயலாளர் வரதீஸ்வரன் தெரிவிப்பு..
நாடு தற்போதுள்ள நெருக்கடியான சூழ்நிலையில் கல்வியற் கல்லூரியை நிறைவு செய்த ஆசிரிய மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் கிடைத்தமை எமக்குத் கிடைத்த வரப்பிரசாதமாகும் என வடமாகாண கல்வியமைச்சின் செயலாளர் எஸ் வரதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்று வெள்ளிக்கிழமை கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியில் இடம்பெற்ற 355 ஆசிரிய மாணவர்களுக்கான நிரந்தர நியமனம் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரி ஆசிரிய மாணவர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனத்தை வழங்க முடியுமா என்ற சந்தேகத்தில் இருந்தோம்.
எனினும் உரிய தரப்பினருடன் கலந்துரையாடி நிரந்தர நியமனத்தை வழங்கக் கூடியதாக இருந்தமை ஆசிரியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதமாகும். ஆகவே இவ்வாறு ஆசிரியர் நியமனங்களை பெற்றவர்கள் தாம் செல்லும் பகுதியில் கற்பித்தல் செயற்பாடுகளை வினைத்திறனாக செய்து,
ஆசிரிய சேவைக்கு பெருமை சேர்க வேண்டும் என அவர் தெரிவித்தார். இந் நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துளசேன, வடமாகாண கல்விப் பணிப்பாளர் எஸ்.உதயகுமார்
மற்றும் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியின் பீடாதிபதி மற்றும் விரிவுரையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.