வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் மதகு மீது மோதி விபத்து! யாழ்.தெல்லிப்பழையில் சம்பவம்..

ஆசிரியர் - Editor I
வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் மதகு மீது மோதி விபத்து! யாழ்.தெல்லிப்பழையில் சம்பவம்..

யாழ்.தெல்லிப்பழை துர்க்கை அம்மன் கோயிலுக்கு அருகாமையில் வேக கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ் வாகனம் மதகுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இன்று இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, யாழ்.நோக்கி வருகைதந்து கொண்டிருந்த நிலையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஹயஸ்

வீதியின் அருகில் இருந்த மதகுடன் மோதி விபத்துக்குள்ளானதில் வாகனத்தின் முற்பகுதி பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த சம்பவத்தில் சாரதி காயங்களுக்கு உள்ளான நிலையில் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு