தேசிய கல்வியியற் கல்லுாரி படிப்பை நிறைவுசெய்த 355 ஆசிரியர்களுக்கு இன்று நிரந்தர நியமனம்..!
தேசிய கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறிய ஆசிரிய மாணவர்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை காலை நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஆர்.வரதீஸ்வரன் தெரிவித்தார்.
கல்வியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் ஆசிரிய மாணவர்களிற்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கும் வகையில் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் கீழ் உள்ள பாடசாலைகளிற்கு 355 ஆசிரியர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்களிற்கான நியமனம் இன்று காலை 9 மணிக்கு கோப்பாய் கல்வியல் கல்லூரியில் வடமாகாண பிரதம செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேனவினால் வழங்கப்படும்.
இவ்வாறு ஆசிரியர் நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் 4 ஆம் திகதி தமது கடமைகளை பொறுப்பேற்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்.