முகத்தை அழகாக்கும் முயற்சியில் விபரீதம்!! -6 மடங்கு பெருத்த பெண்ணின் உதடு-
தான் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பில்லர் பயன்படுத்திய பெண்ணின் உதடு 6 மடங்கு பெருத்து பேச முடியாத நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து நாட்டின் செஸ்டர் நகரில் வசித்து வரும் 2 குழந்தைகளுக்கு தாயான லாரன் ஈவன்ஸ் என்ற பெண் தனது உதடு அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக பில்லர் பயன்படுத்தி உள்ளார்.
குறிப்பாக உதடு சற்று பெரிய அளவில் பருமனாக தெரிவதற்காக, ஊசி போட்டுக் கொண்டுள்ளார். நேரம் செல்ல செல்ல அவரது உதடு இயல்பில் இருந்து பெருத்து விட்டது. பயந்து போன லாரன் உடனடியாக மருத்துவரை நாடியுள்ளார்.
அவரால் பேச முடியவில்லை. சுவாச பகுதிகள் நெருக்கம் அடைந்து சுவாசிக்கவும் சிரமம் ஏற்பட்டு உள்ளது. இதனால், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.