மதுபோதையில் கர்ப்பிணிக்கு பாலியல் வன்கொடுமை!! -அராஜகம் செய்யும் ரஷிய படைகள்-
என்னுடன் இணங்கி வராவிட்டால் மேலும் 20 பேரை கூப்பிடுவேன் என அச்சுறுத்தி 16 வயது கர்ப்பிணியை மதுபோதையில் ரஷிய படையினர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
ரஷியாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ள கெர்சன் கிராமத்தில் வசிக்கும் 16 வயதுடைய 6 மாத கர்ப்பிணி ஒருவர் சி.என்.என்.னுக்கு கொடுத்த நேர்காணலிலேயே மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
குண்டுவீச்சில் இருந்து காத்து கொள்வதற்காக எங்களது வீட்டின் அடித்தளத்தில் குடும்பத்தினருடன் பதுங்கி இருந்தோம். உணவு கொடுப்பதற்காக மாலை வேளையில் குழந்தைகளுடன் வெளியே வரும்போது, குடிபோதையில் இருந்த ரஷிய வீரர் ஒருவர் எங்களை பார்த்து விட்டார்.
அவர் எங்களை நோக்கி, அனைவருக்கும் என்ன வயது? என கேட்டார். 12 மற்றும் 14 வயதில் 2 சிறுமிகள் இருந்தனர். எனக்கு வயது 16. முதலில், எனது தாயாரை அவர் கூப்பிட்டார். உடனே அவரை விட்டுவிட்டு, பின்னர் என்னை கூப்பிட்டார்.
நான் சென்றதும் உடைகளை களையும்படி கூறினார். நான் முடியாது என்றபோது, என்னுடைய ஆசைக்கு இணங்காவிட்டால் இன்னும் 20 பேரை கூப்பிடுவேன் என்று அச்சுறுத்தினார்.
மதுபோதையில் பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட ரஷிய வீரர் அந்த கர்ப்பிணியை கொல்லவும் முயன்றுள்ளார். மற்றொரு ரஷிய வீரர், இந்த சம்பவங்களை நடக்காமல் தடுக்க முற்பட்டார். அதனை நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால், மதுபோதையில் இருந்த ரஷிய வீரர் அதனை கேட்கவில்லை.
அந்த ஆசாமிக்கு நீல நிற கண்கள் இருந்தன. ஆனால், அடர்த்தியாக இருந்தன. வேறு எதுவும் எனக்கு நினைவில்லை என்று 16 வயது கர்ப்பிணி கூறியுள்ளார்.