”கோட்டபாய ராஜபக்ஸ ஒரு வைரஸ்” ஒரு வைரஸ்..! யாழ்.பல்கலைகழக மருத்துவ பீட மாணவர்கள் யாழ்.நகரில் போராட்டம்..
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலக வேண்டும் என கோரி யாழ்.பல்கலைகழக மருத்துபீட மாணவர்கள் இன்று பிற்பகல் யாழ்.நகரில் எதிர்ப்பு பேரணி நடத்தினார்கள்.
நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றம் எரிபொருள் தட்டுப்பாடு, மருந்துப் பொருட்களுக்கு தட்டுப்பாடு போன்றவற்றால் மக்களை வதைக்காதே
என்ற கோஷங்களுடன் யாழ்.போதனா வைத்தியசாலையின் முன் ஆரம்பித்த போரணி யாழ்.நகரத்தை வலம் வந்தது.
இதன்போது கருத்து தெரிவித்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோட்டா ஒரு வைரஸ் நாட்டை அழிக்காமல் வெளியேற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.