கமலா ஹாரிஸுக்கு கொரோனா!!
அமெரிக்கா நாட்டின் உப ஜனாதிபதி கமலா ஹாரிஸுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
நாட்டினை வழமைக்கு திருப்பும் முயற்சியில் அமெரிக்கா கட்டுப்பாடுகளை தளர்த்திவரும் நிலையில் அவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விரைவு அன்டிஜன் மற்றும் பிசிஆர் சோதனைகளில் உப ஜனாதிபதிக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் எவ்வித அறிகுறிகளையும் கொண்டிருக்கவில்லை என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
அத்துடன், கமலா ஹாரிஸ் தனது இல்லத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து தொடர்ந்தும் பணியாற்றுவார் என்றும் எதிர்மறையான பெறுபேறு கிடைத்தால் மட்டுமே அவர் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவார் என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.