ருவிட்டர் நிறுவனத்திற்கு வாங்கிய எலான் மாஸ்க்!!
44 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் விடுத்த கோரிக்கையை அந்த நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளது.
ருவிட்டர் நிறுவனத்தை வாங்குவதற்கு எலான் மஸ்க் இரு வாரங்களுக்கு முன்னதாக விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும், ருவிட்டர் தளத்தில் பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவது குறித்தும் பதிவுகள் சிலவற்றுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்துதல் மற்றும் போலி கணக்குகளை நீக்குவது தொடர்பிலும் கருத்துரைத்திருந்தார்.
ருவிட்டர் நிறுவனத்தில் 9.2 சதவீதப் பங்குகளை வைத்துள்ள எலான் மஸ்க் அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராக தற்போது உள்ளார். ருவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய பிறகு அது ஒரு கூட்டுப் பங்கு நிறுவனமாக இல்லாமல் தனியார் நிறுவனமாக மாற்றப்படும் என தெரிவிக்கப்படுகிறது.