SuperTopAds

யாழ்.ஆனைக்கோட்டை, காக்கைதீவு பகுதிகளை சேர்ந்த 15 பேர் தமிழகத்தில் இன்று காலை தஞ்சம் புகுந்தனர்..!

ஆசிரியர் - Editor I
யாழ்.ஆனைக்கோட்டை, காக்கைதீவு பகுதிகளை சேர்ந்த 15 பேர் தமிழகத்தில் இன்று காலை தஞ்சம் புகுந்தனர்..!

யாழ்ப்பாணத்தை சேர்ந்த 15 பேர் இன்று காலை  தனுஷ்கோடி - கோதண்டராமர் கோவில் கடற்கரை ஊடாக தமிழகத்திற்குள் தஞ்சம் புகுந்திருக்கின்றனர். 

இவர்களை இராமேஸ்வரம் கடலோர காவல் படையினர் மீட்டுள்ளதுடன் மண்டபம் பொலிஸாரிடம் ஒப்படைத்திருக்கின்றனர். 

விசாரணைகளின்போது , ஆனைக்கோட்டை, காக்கைதீவு பகுதிகளை சேர்ந்த தாம் நெடுந்தீவு கடற்கரையில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை படகில் ஏறியதாகவும், 

இன்று அதிகாலை 3 மணியளவில் அப்பகுதியில் இறக்கி விடப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர். அதேவேளை , 

கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக தற்போது அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை, விலை கடுமையாக உயர்ந்துள்ளது. 

ஒரு கிலோ பச்சை மிளகாய் ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்வதால், எப்படி வாங்கி சாப்பிட முடியும்? மருத்துவ பொருட்களுக்கும் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 

அரசு மருத்துவமனையில் போதிய மருந்துகள் இல்லை. தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால் காய்ச்சல் தலை வலிக்கு 4 ஆயிரம் வரை வசூல் செய்கிறார்கள். 

இதே நிலை நீடித்தால் இலங்கையில் பட்னி சாவு ஏற்பட்டு, அனைவரும் உயிரிழக்க நேரிடும். எனவே உயிரை காப்பாற்றி கொள்ள 

தமிழகத்திற்கு அகதிகளாக வந்ததாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி முதல் இன்று வரை 75 இலங்கை தமிழர்கள் 

அகதிகளாக தமிழகம் சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.