SuperTopAds

இலங்கையில் அதிகளவு விபத்துக்கள் நடக்கும் மாகாணமாக வடமாகாணம்...

ஆசிரியர் - Editor I
இலங்கையில் அதிகளவு விபத்துக்கள் நடக்கும் மாகாணமாக வடமாகாணம்...

வடமாகாணத்தில் 2018ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 951 விபத்துக்கள் நடந்துள்ளது. இந்த விபத்துக்களில் 16 பேர் உயிரிழந்துள்ளார்கள். இந்நிலையில் வடமாகாணத்தில் விபத்துக்களை கட்டுப்படுத்த விசேட செயற்றிட்ட ம் கொண்டுவரப்படவேண்டும். எனக்கோரி மாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

வடமாகாணசபையின் 122வது அமர்வு இன்று பேரவை செயலகத்தின் சபா மண்டபத்தில் நடைபெற்றிருந்தது. இதன்போது மேற்படி தீர்மானத்திற்கான பிரேரணையை மாகாணசபை உறுப்பினர் த.குருகுலராஜா சபைக்கு கொ ண்டுவந்தார். 

பிரேரணையை சபைக்கு கொண்டுவந்து குருகுலராஜா கருத்து தெரிவிக்கையில், கடந்த 2017ம் ஆண்டில் வட மாகாணத்தில் 1500ற்கும் மேற்பட்ட விபத்துக்கள் நடந்துள்ளன. அதில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். 315 பேர் த லையில் பலத்த காயமடைந்துள்ளனர். 

அதேபோல் 2018ம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் 951 பேர் விபத்துக்களில் சிக்கி அதில் 16 பேர் உயிரிழந்துள்ள னர். என கூறினார். இந்த பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய மாகாணசபை உறுப்பினர் ப. சத்தியலிங்கம் கருத்து தெரிவிக்கையில், 

போக்குவரத்து பொலிஸார் வீதி ஒழுங்ககளை பார்க்காமல் தமது மோட்டார் சைக்கிள்களில் பொருத்தப்பட்டிருக்கு ம் பெட்டியை திறந்து வைத்துக் கொண்டு இலஞ்சம் கேட்கிறார்கள். மேலும் மக்களுக்கும் போக்குவரத்து விதி முறைகள் தொடர்பில் போதிய விழிப்புணர்வில்லை என்றார்.

தொடர்ந்து எதிர்கட்சி தலைவர் சி.தவராசா கூறுகையில், வடமாகாணத்தில் போக்குவரத்து சமிக்ஞை விளக்குகள் ஒழுங்காக வேலை செய்வதில்லை. இதனை விட பிரதேச சபைகள் மற்றும் மாநகர சபைகள் நடைபாதை வியாபா ரிகளை கட்டுப்படுத்துவதில்லை. இதனாலும் விபத்துக்கள் நடக்கின்றன.

அந்தவகையில் மக்கள் மத்தியில் விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வுட்டலை செய்வதோடு மட்டும் நின்றுவி டாமல் சட்டங்களை இறுக்கமாக்கவேண்டும். தண்டணைகள் கடுமையாக்கப்படவேண்டும். முதலமைச்சர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் என்றவகையில் அதனை செய்யவேண்டும் என்றார்.