இன்று யாழ்ப்பாணம் வருகிறார் இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஐீலி சுங்..! பல்வேறு தரப்புக்களுடன் பேச்சு...

ஆசிரியர் - Editor I
இன்று யாழ்ப்பாணம் வருகிறார் இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஐீலி சுங்..! பல்வேறு தரப்புக்களுடன் பேச்சு...

இலங்கைக்கான அமொிக்க துாதுவர் ஐீலி சுங் இன்று யாழ்.மாவட்டத்திற்கு விஜயம் செய்யவுள்ள நிலையில் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் உள்ளிட்ட அரசியல் தரப்புகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் சந்திப்புக்களையும் நடத்தவுள்ளார். 

இன்று மாலை யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ்ப்பாணம் வருகைதரும் அமொிக்க துாதுவர் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்களை சந்திக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

குறித்த சந்திப்பில் தற்போது நாட்டில் இடம்பெறும் அரசியல் சூழ்நிலை, நில ஆக்கிரமிப்பு அரசியல் கைதிகள் விவகாரங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட உள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு