SuperTopAds

ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது..!

ஆசிரியர் - Editor I
ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரியின் இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது..!

யாழ்.ஊர்காவற்றுறை சுகாதார வைத்திய அதிகாரிக்கு வழங்கப்பட்ட இடமாற்றம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருக்கின்றது.

ஊர்காவற்துறை சுகாதார வைத்திய அதிகாரியாக கடமையாற்றிய வைத்திய கலாநிதி பரா நந்தகுமார் தெல்லிப்பழை சுகாதார வைத்திய அதிகாரியாக இடமாற்றப்பட்டார். 

இந்நிலையில் ஊர்காவற்துறைக்கு நிரந்தர சுகாதார வைத்திய அதிகாரி ஒருவரை நியமனம் செய்யாமல் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 

குறித்த விடயம் வடமாகாண ஆளுநர் கவனத்திற்கு சென்றதன் காரணமாகவே இந்த இடமாற்றம் நிறுத்தப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.