உக்ரைனுக்கு இன்னும் சில தினங்களில் கனரக ஆயுதங்கள்!! -வழங்குகிறது ஜெர்மனி-
ரஷியா படைகளை எதிர்த்துப் யுத்தம் செய்யும் உக்ரைனின் இராணுவத்துக்கு பல மாதங்கள் நீண்டகால ஆதரவை வழங்க ஜெர்மனி உறுதிபூண்டுள்ளதாக ஜெர்மனி வெளியுறவுத்துறை மந்திரி நேற்று தெரிவித்தார்.
ரஷியா-உக்ரைன் யுத்தம் ஆரம்பித்ததில் இருந்து அமெரிக்கா, பிரிட்டன், செக் குடியரசு மற்றும் நெதர்லாந்து போன்ற நட்பு நாடுகள் தங்கள் தரப்பிலிருந்து உக்ரைனுக்கு வழங்கப்படும் இராணுவ விநியோகங்களை அதிகரித்துள்ளன.
ஆனால் மறுமுனையில் ஐரோப்பிய நாடான ஜெர்மனி, உக்ரைனுக்கு கனரக ஆயுதங்களை அனுப்ப மறுத்ததற்காக கடும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில், அடுத்த சில நாட்களில் உக்ரைனுக்கு ஒரு புதிய கனரக ஆயுதங்களை வழங்க, கிழக்கு ஐரோப்பிய நாடுகளுடன் ஜெர்மனி ஒப்பந்தம் செய்துள்ளது.