நிறைபோதையில் வீட்டிற்கு வந்த மகன், உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்தே கொன்ற குரூரம்..!
நிறைபோதையில் வந்த மகன் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை அடித்துக் கொலை செய்த சம்பவம் மூதுார் - தோப்பூர் பாலத்தடி சேனை பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, நேற்றுமுன்தினம் இரவு நிறைபோதையில் வீட்டுக்கு வந்த 31 வயதான மகன், வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த தந்தையை பொல்லால் அடித்து கொலை செய்துள்ளான்.
இதனையடுத்து மகன் கைது செய்யப்பட்டுள்ளதுடன், நேற்று காலை சம்பவ இடத்தை பார்வையிட்ட மூதுார் நீதிவான் நீதிமன்ற நீதிவான் தஸ்லீம் பௌஸான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்த பணித்துள்ளார்.