SuperTopAds

சுபகிருது வருடப்பிறப்பு சுப நேரங்கள்

ஆசிரியர் - Admin

மலரும் மங்களகரமான சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2020) வியாழக்கிழமை காலை 7.50 க்கு வாக்கிய பஞ்சாங்கப்படி பிறக்கிறது.

இதேவேளை மலரும் சுபகிருது என்ற புதிய ஆண்டு (14.04.2020) வியாழக்கிழமை காலை 8.41 க்கு திருக்கணித பஞ்சாங்கப்படி பிறக்கிறது.

2022 ஆம் ஆண்டு இன்று காலை 8.00 மணி 41 நிமிடத்தில்“சுபகிருது”வருடம் பிறக்கிறது.

சுபகிருது என்றால் அதிக நன்மைகள் நிறைந்த ஆண்டு என்று பொருள்.

வியாழக்கிழமை காலை 7.57 மணி முதல் காலை 9.51 மணி வரையும், வெள்ளிக்கிழமை காலை 9 மணி 51 நிமிடம் வரையும் மருத்து நீர்வைக்கும் நேரமாக கணிக்கபட்டுள்ளது.

இந்த வருட பிறப்பின் பவள புஸ்பரகம் கொண்ட ஆபரணங்கள்,கடும் சிவப்பு அல்லது மஞ்சள்நிறப்பட்டு ஆடை அல்லது சிவப்புகரை அமைந்த புத்தாடை அணியலாம்.

கைவிஷேடம் பரிமாறுவதற்கு வாக்கிய பஞ்சாங்கப்படி இன்று காலை 7.57 முதல் 8.47 வரையும், நாளை (15) காலை 7.52 முதல் 9.51 வரையும், திருக்கணித பஞ்சாங்கப்படி இன்று(14) காலை 8.50 முதல் 9.42 வரையும், நாளை (15) காலை 8.35 முதல் 9.50 வரையும் சுபநேரம் காணப்படுகிறது.

வியாபாரம் அல்லது புது கணக்கு ஆரம்பிப்பவர்கள் வைகாசி மாதம் (மே மாதம்)11 ஆம் திகதி புதன் கிழமை காலை 6.10 மணி முதல் காலை 7.20 மணி வரையிலும், 13 ஆம் திகதி வெள்ளிகிழமை காலை 06.03 தொடக்கம் காலை 08.03 மணி வரைக்கும் ஆரம்பிப்பது சிறந்தது.