Jaffnazone செய்திக்கு உடன் நடவடிக்கை, மந்திகை வைத்தியசாலையில் நீர் விநியோக தடை சீரானது! எமது செய்தி பிரிவுக்கு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவிப்பு..
யாழ்.பருத்தித்துறை - மந்திகை ஆதார வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடைப்பட்டமை தொடர்பாக jaffnazone இணைய ஊடகம் சுட்டிக்காட்டியிருந்த நிலையில் நீர் விநியோக பிரச்சினை துரிதமாக சீர்செய்யப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் எமக்கு பதிலளித்துள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது, எமது வைத்தியசாலைக்கு தொடர்ச்சியாக மின்சாரம் கிடைத்து வருகின்றது. எமது வைத்தியசாலைக்கு நீர் விநியோகம் செய்யும் மோட்டார் கிணற்றுக்குள் அடியில் இருப்பதால் அதில் ஏற்பட்ட திடீர் கோளாறு நீர் விநியோகம் தடை காரணமாக அமைந்தது.
குறித்த மோட்டாருக்குப் பயன்படுத்தப்படும் புல்வாரை வாங்குவதில் ஏற்பட்ட சிரமமே உடனடியாக சீர் செய்ய முடியாமல்போனது.
எனினும் நேற்று மாலை தொடக்கம் வைத்தியசாலை ஊழியர்களின் விடாமுயற்சியினால் இன்று அதிகாலை 2 மணிக்கு நீர் விநியோகத்தை வழங்க முடிந்தது.
ஆகவே மந்திகை ஆதார வைத்தியசாலையின் வைத்தியர் அத்தியட்சகர் என்ற வகையில் வைத்தியசாலையிலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் நோயாளர்கள் தொடர்பிலும் தாம் கண்ணும் கருத்துமாக இருப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.
குறித்த வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடை பட்டமை தொடர்பில் எமது jaffnazone செய்திப்பிரிவு நேற்றைய தினம் செய்தி சுட்டிக்காட்டியமை குறிப்பிடத்தக்கது.