உக்ரைனுக்கு மேலும் 5 ஆயிரம் கோடி இராணுவ உதவி!! -அமெரிக்கா அதிரடி முடிவு-

ஆசிரியர் - Editor II
உக்ரைனுக்கு மேலும் 5 ஆயிரம் கோடி இராணுவ உதவி!! -அமெரிக்கா அதிரடி முடிவு-

ரஷியா படைகளை எதிர்த்துப் போராட உக்ரைனுக்கு மேலும் 5 ஆயிரம் கோடி ரூபா பெறுமதியான இராணுவ உதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைன் - ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையில் 49 ஆவது நாளாகவும் போர் நடைபெற்று வருகின்றது. இந்த போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் இராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

அந்த வகையில் உக்ரைனுக்கு ஏற்கனவே 1.7 பில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது.

இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 750 மில்லியன் டொலர் மதிப்பிலான இராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் உக்ரைனுக்கு இராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள், ராக்கெட்டுகள், மருந்துப்பொருட்கள் உள்பட பல்வேறு இராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனுக்கு அமெரிக்கா வழங்க திட்டமிட்டுள்ள உள்ள இராணுவ உதவிகள் இந்திய மதிப்பில் 5 ஆயிரத்து 713 கோடி ரூபாய் ஆகும்.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு