பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடைப்பட்டதால் அந்தரித்த நோயாளர்கள்! வடமாகாண சுகாதாரத்துறை ஆழ்ந்த உறக்கம்..
யாழ்.பருத்தித்துறை - மந்திகை வைத்தியசாலையில் நீர் விநியோகம் தடைப்பட்ட நிலையில் நோயாளர்கள் பல அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, மந்திகை ஆதார வைத்தியசாலையின் மின்பிறப்பாக்கி பழுது பட்டமையல் நீர் விநியோகம் நிறுத்தப்பட்டிருக்கின்றது.
சுமார் 6 மணித்தியாலங்களாக நோயாளர்கள் மற்றும் குழந்தை பிரசவித்த பெண்கள் மலசல கூடத்தைப் பயன்படுத்த நீரின்மையால் அவதிப்பட்டதாக
வைத்தியசாலையில் தங்கியிருந்த நோயாளர்கள் சிலர் தொிவித்திருக்கின்றனர். குறித்த வைத்தியசாலையில் நீர்த்தாங்கியில் சேமிக்கப்பட்ட நீரும் முடிவுற்ற நிலையில்
இரவு 10 மணியைக் கடந்தும் நீர் விநியோகம் சீராகப்படவில்லை. வடமாகாண சுகாதாரத் துறையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்
அண்மையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் மின்பிறப்பாக்கி இருந்தும் ஒழுங்கான பராமரிப்பின்மையால் மின்சாரம் தடைப்பட்டபோது
3 நாட்களாக குறித்த வைத்தியசாலை இரவில் இருளில் மூழ்கிய சம்பவம் தொடர்பில் வடமாகாண சுகாதார பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரனை
தொடர்பு கொள்ள முயற்சித்தபோதும் தொடர்பு கொள்ள முடியவில்லை. குறித்த சம்பவம் தொடர்பில் வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு விடயம்
கொண்டு செல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.