ஒமிக்ரோனுக்கு எதிரான புதிய தடுப்பூசி ரெடி!! -கண்டுபிடித்து அசத்திய விஞ்ஞானிகள்-
ஒமிக்ரோன் உள்ளிட்ட சார்ஸ்-கோவ்-2 வகை வைரஸ்களுக்கு எதிரான புதிய தடுப்பூசியை ஆஸ்திரியா நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்து அசத்தியுள்ளனர்.
குறித்த தடுப்பூசி, ஆர்.பி.டி. என்று அழைக்கப்படுகிற வைரசின் ஏற்பி பிணைப்பு கலங்களை குறிவைக்கிறது. விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் இந்த தடுப்பூசியை செலுத்தி பரிசோதித்ததில் இது நோய் எதிர்ப்புச்சக்தியை உருவாக்குவது தெரிய வந்துள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
இந்த நோய் எதிர்ப்புச்சக்தியானது உடல் செல்களுக்குள் வைரஸை நுழைய விடாமல் தடுக்கிறது. இதனால் தொற்று ஏற்படாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். போதுமான நிதி கிடைத்தால், ஒப்புதலுக்கு தேவையான முதல் மருத்துவ பரிசோதனைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.