இலங்கையர்களுக்கு ஆதரவு!! -அவுஸ்திரேலியாவில் களமிறங்கிய மக்கள்-
அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் இலங்கை அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கை மக்களுக்கு ஆதரவாகவும் வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இலங்கை முழுவதும் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கொழும்பில் மக்களும் எதிர்க்கட்சி அரசியல் வாதிகளும் இணைந்து வீதிகளில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையிலேயே அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் அவுஸ்திரேலியாவில் உள்ள மக்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இலங்கையில் இடம்பெறும் அரச எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களிற்கு ஆதரவாக அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மெல்பேர்ன் சிட்னி பிரிஸ்பேர்ன் பேர்த் உட்படப் பல நகரங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோட்டாபய ராஜபக்ச அரசாங்கம் பதவி விலகவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளனர்.