சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க அனுமதி கோரப்பட்டுள்ளது..
வடக்கு மாகாண சுகாதாரத் தொண்டர்களு க்கு நிரந்தர நியமனம் வழங்கும் நோக்கில் வடமாகாண ஆயுள்வேத வைத்தியசாலை களில் உள்ள 43 வெற்றிடங்களுக்கு மேற்ப டி சுகாதார தொண்டர்களை நியமிக்க அனு மதி கோரப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண வைத்தியசாலைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீண்ட காலமாக தொண்டர் அடிப்படைநில் பணியாற்றி நிரந்தர நியமனம் கிடைக்காமல் போராடிவரும் தொண்டர்களை நிரந்நரமாக்கும் நோக்கில் மத்திய சுகாதார அமைச்சுடன் பேச்சு நடாத்தி வடக்கு மாகாணத்திற்கான ஊழியர்களிற்கான ஆளணி அங்கீகாரம் மீளாய்வு இடம்பெறுகின்றது. இருப்பினும் குறித்த பணி நீண்ட நாட்களாக தாமதடைவதனால் குறித்த தொண்டர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள ஏனைய அலகுகளில் கானப்படும் குறித்த வெற்றிடத்திற்கு மேற்படி தொண்டர்களில் இருந்து உள்ளக ரீதியாக விண்ணப்பங்களை கோரி நிரந்தர நியமனங கள் வழங்குவதற்கான முயற்சிகள் இடம்பெறுகின்றன. இதன் முதல் கட்டமாக குறித்த வெற்றிடத்தை நிரப்பவும் மேற்படி தொண்டர்களில் இருந்து உள்ளக ரீதியில் விண்ணப்பங்களை கோருவதற்கும் வடக்கு மாகாண ஆளுநரின் அனுமதிக்கு தற்போது விண்ணக்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த அனுமதி கிடைத்ததும் உடனடியாக உள்ளக ரீதியில் தொண்டர்களில் இருந்து ஆயுள்வேத வைத்தியசாலைகளில் நிலவும் 43 வெற்றிடங்களையும் நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன.