SuperTopAds

நோபல் பரிசு வென்றவரின் நாளிதழுக்கு தடை!! -ரஷியா அரசின் அடக்குமுறை-

ஆசிரியர் - Editor II
நோபல் பரிசு வென்றவரின் நாளிதழுக்கு தடை!! -ரஷியா அரசின் அடக்குமுறை-

போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக குற்றம் சுமத்தி, நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முராடோவின் நாளிதழை வெளியிடுவதற்கு ரஷியா அரசாங்கம் தடை வித்தித்துள்ளது. 

உக்ரைன் மீது ரஷியா படைகள் இன்று 34 இவது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்நிலையில் போருக்கு எதிரான கருத்துகளை தெரிவித்ததாக குற்றம் சுமத்தி, நோபல் பரிசு பெற்ற டிமிட்ரி முராடோவின் நோவா கெஜட் என்ற நாளிதழை ரஷிய அரசு தடை செய்துள்ளது. 

இதன் உரிமையாளரான டிமிட்ரி முராடோவ் கடந்த ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.