சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது!! -வென்றார் வில் ஸ்மித்-

ஆசிரியர் - Editor II
சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருது!! -வென்றார் வில் ஸ்மித்-

சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை ஹொலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டிச் சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 94 ஆவது ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது. குறித்த நகரின் ஹொலிவுட் பவுல்வார்ட்டில் உள்ள டால்பி திரையரங்கத்தில் நடைபெறும் ஒஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவானது, இந்த ஆண்டு வழக்கமான பாரம்பரிய முறைப்படி நடைபெறுகிறது. 

ஒஸ்கார் விருது விழா கடந்த 4 வருடங்களாக தொகுப்பாளர்கள் இன்றி நடத்தப்பட்டு வந்த நிலையில், இந்த ஆண்டு வாண்டா சைக்ஸ் , ஏமி ஸ்கூமர் , ரெஜினா ஹால் ஆகியோர் தொகுத்து வழங்கி வருகின்றனர். 

ஒஸ்கார் விருது விழாவை மூன்று பெண்கள் தொகுத்து வழங்குவது இதுவே முதன்முறை. இந்நிலையில், சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை ஹொலிவுட் நடிகர் “வில் ஸ்மித்” தட்டிச் சென்றுள்ளார். “கிங் ரிச்சர்ட்“ திரைப்படத்திற்காக வில் ஸ்மித்துக்கு ஒஸ்கார் விருது வழங்கப்பட்டுள்ளது.


காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு