ஒரே நாளில் 200 ரஷிய இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்!! -உக்ரைன் இராணுவம் தகவல்-
நடைபெற்றுவரும் போரில் சுமார் 200 ரஷிய இராணுவ வீரர்களைக் ஒரே நாளில் கொன்றுள்ளதாக உக்ரைன் இராணுவம் தகவல் தெரிவித்துள்ளது.
உக்ரைனில் ரஷிய இராணுவம் நடத்தி வரும் தாக்குதல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷிய இராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் படைகள் சுமார் 200 ரஷிய இராணுவ வீரர்களைக் கொன்றதுடன், ஒன்பது தாக்குதல்களையும் முறியடித்துள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 12 டாங்கிகள், 20 கவச வாகனங்கள், 9 பீரங்கி அமைப்புகள், 3 விமானங்கள் மற்றும் 3 ஆளில்லா விமானங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.