SuperTopAds

ரஷ்ய அரச இணையதளத்தை முடக்க முயற்சி!! -3 இலட்சம் உக்ரைன் ஹேக்கர்கள் களத்தில்-

ஆசிரியர் - Editor II
ரஷ்ய அரச இணையதளத்தை முடக்க முயற்சி!! -3 இலட்சம் உக்ரைன் ஹேக்கர்கள் களத்தில்-

ரஷ்ய அரசாங்கத்தின் இணையதளத்தை முடக்க 3 இலட்சம் உக்ரைன் ஹேக்கர்கள் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர் என்று சைபர் பாதுகாப்பு நிறுவனமான 'சைபர் கெயாஸ்' தகவல் வெளியிட்டுள்ளது. 

இரு நாடுகள் இடையே கடந்த 3 வாரங்களாக தீவிர போர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ரஷ்ய அதிகாரபூர்வ இணையதளத்தை முடக்க உக்ரைன் ஐடி ஆர்மி முயற்சி மேற்கொள்வதாக தெரியவந்துள்ளது. இதற்காக உக்ரைன் நாட்டை சேர்ந்த 3 இலட்சம் கணினி ஹேக்கர்கள் இரவு பகலாக கோடிங் செய்து வருகின்றனர்.

இதன் மூலமாக ரஷ்யாவின் முக்கிய வர்த்தகத் தொடர்புகள் மற்றும் அன்றாட அரச பணிகள் பாதிக்கப்படும். இதனால் போர் புரிவதை நிறுத்திக் கொள்ளும் என்று உக்ரைனின் ஜெலன்ஸ்கி அரசு கருதுகிறது. 

தற்போது உக்ரைனில் ரஷ்ய படைகளின் தாக்குதலை நிறுத்துவதற்காக ஜெலன்ஸ்கி அரசு ஹேக்கர்களின் உதவியை நாடியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரபல சமூக வலைத்தளம் ஒன்றில் ஐடி ஆர்மி ஆப் உக்ரைன் லிங்க் உக்ரைன் மின்னணு தகவல் பரிமாற்ற துறை அமைச்சர் மைகைலோவ் பெட்டோரோவால் கடந்த மாதம் பகிரப்பட்டது. 

இதனை அடுத்து இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கலாம் என கூறப்படுகிறது. அதே சமயத்தில் ரஷ்யா உக்ரைன் மீது தனது ஹேக்கர்கள் கொண்டு எந்தவித தாக்குதலையும் நடத்தவில்லை எனத் தெரிவித்துள்ளது.