சிங்கப்பூரில் வாள்வெட்டை தடுத்து நிறுத்திய இலங்கையர்!! -கௌரவித்த பொலிஸ்-
சிங்கபூரில் வாள் வெட்டு தாக்குதல் நடத்திய நபரை தடுத்து நிறுத்திய இலங்கை பிரஜை ஒருவர் அவரை மடக்கி பிடித்த சம்பவத்திற்காக அந்நாட்டு அரசாங்கத்தால் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது:-
சிங்கபூரில் புவாங்கொக் கிரசன்ட் பகுதியில் குமாரபேலி ஆராச்சிகே அமில சிந்தன என்ற 35 வயதான இலங்கை பிரஜை கடையில் பொருட்களை வாங்கிக் கொண்டு வீதியை கடக்க வீதி சமிஞ்சை அருகில் நின்று கொண்டிருந்தார்.
இதன் போது அங்கு வாளுடன் வந்த நபர் அமில சிந்தனவை தாக்கினார். உடனே அமில சிந்தன குறித்த நபர் தன்னை தாக்குவதை தடுத்தார். அவ்வேளை இருவரும் கீழே விழ அருகிலிருந்த மற்றொருவர் சென்று வாள் தாக்குதலை நடத்திய நபரை மடக்கி பிடித்தனர்.
அமில சிந்தனவிற்கு இடது தோள்பட்டை, முழங்கை மற்றும் முழங்கால்களில் காயங்கள் இருந்தபோதிலும், பொலிஸ் வரும் வரை மற்றையவர்களுடன் சேர்ந்து குறித்த நபரை பிடித்து வைத்திருந்தனர்.
பின்னர் பொலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து வாள் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்தனர். வாள்வெட்டை மேற்கொண்ட 37 வயதான நபர் வாளுடன் வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் மாத்திரைகளை உட்கொண்டதாக பொலிஸாரின் ஆரம்க கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அவரது குடியிருப்புப் பகுதியில் பொதுமக்களுடன் வாக்குவாதத்திற்குப் பின்னர், அவர் வீதியில் குறுக்கே நடந்து சென்று, அந்த வாளை பயன்படுத்தி ஐந்து கார்களை தாக்கியதாக சிங்கப்பூர் பொலிஸ் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட நபரைக் கட்டுப்படுத்த உதவியதற்காக செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் பொலிஸாரிடமிருந்து பொது உணர்வுக்கான விருதுகளைப் பெற்ற 6 பேரில் அமில சிந்தனையும் உள்ளடங்குகிறார்.
குமாரபேலி ஆராச்சிகே அமில சிந்தன, லிம் ஜுன் யீ, முஹம்மது நூர் ரப்பானி மொஹமட் ஜைனி, லிம் ஜியாஜிங், முஹம்மது நௌபல் அஹ்மத்சுப்ரோண்டோ மற்றும் திருமதி கெர்வின் கோ ஆகிய 6 பேருக்கும் செவ்வாய்க்கிழமை பிற்பகல் அங் மோ கியோ பொலிஸ் பிரிவின் தலைமையகத்தில் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.