உக்ரைன் மீதான படையெடுப்பு!! -12 முக்கிய இராணுவ அதிகாரிகள் இழந்த ரஷ்யா-
உக்ரைன் மீதான படையெடுப்பின் போது ரஷ்யா படைகளைச் சேர்ந்த 12 முக்கிய இராணுவ அதிகாரிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மரியுபோல் அருகே நடந்த போரில் 31 வயதான கேப்டன் அலெக்ஸி குளுஷ்சாக் கொல்லப்பட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்ய இராணுவ உளவுத்துறையான புசுருவின் உயர் அதிகாரி உள்பட 3 முக்கிய ஜெனரல்கள் உள்பட 12 தளபதிகளும் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இராணுவ நடவடிக்கையின் ரகசியம் காரணமாக அதிகாரிகள் மரணம் குறித்த விபரத்தை வெளியிட முடியாது என ரஷ்யத் தரப்பு தெவித்துள்ளது.
12 ஆயிரம் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி கூறியுள்ள நிலையில், 500 பேர் மட்டுமே போரில் உயிரிழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.