உக்ரைன் மீதான போர்!! -28 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேற்றம்-
உக்ரைன் மீது ரஷ்யாவின் இராணுவம் நடத்திவரும் தாக்குதல் காரணமாக அங்கிருந்து சுமார் 28 இலட்சம் பேர் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான முகமை தகவல் தெரிவித்துள்ளது.
போர் தொடங்கியது அதிகபட்சமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒரு இலட்சத்து 10 ஆயிரம் பேர் வரை தஞ்சம் கோரி மற்ற நாடுகளுக்கு சென்றதாகவும், இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் ஒரு நாளில் நிகழ்ந்த உச்சபட்ச இடம்பெயர்வு என ஐ.நா அகதிகளுக்கான முகமை மேலும் தகவல் தெரிவித்துள்ளது.
அதிகபட்சமாக போலந்தில் 18 இலட்சம் பேர் புகலிடம் கேட்டும் தஞ்சமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ 10 இலட்சம் குழந்தைகள் கல்வி, ஊட்டச்சத்து மிக்க உணவு உள்ளிட்டவற்றை இழந்துள்ளதாக ஐ.நா. குழந்தைகளுக்கான நிதியம் தெரிவித்துள்ளது.