உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம்!! -ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு-
உக்ரைன் மற்றும் ரஷியா இடையே இன்று செவ்வாய்க்கிழமை போர் 19 ஆவது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில் ரஷியாவிற்கு எதிராக போரிட ஐரோப்பிய நட்பு நாடுகள் ஆயுத உதவிகளை வழங்கி வருகின்றன.
குறிப்பாக உக்ரைன் படைகளுக்கு அமெரிக்கா ஆயுதங்களை வழங்கும் என்று அந்நாட்டு ஜனாதிபதி ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.
ஆக்கிரமிப்பு ரஷிய படைக்கு எதிராக உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவோம் என்று தமது ருவிட்டர் பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.