SuperTopAds

உக்ரைன் தலைநகர் புறநகர் பகுதிகளில் ரஷிய படைகள் கடும் தாக்குதல்!!

ஆசிரியர் - Editor II
உக்ரைன் தலைநகர் புறநகர் பகுதிகளில் ரஷிய படைகள் கடும் தாக்குதல்!!

கீவ் மற்றும் அதை சுற்றியுள்ள வடக்கு நகரங்களில் உக்ரைன் இராணுவத்தினர் கடுமையாக எதிர்த்து போரிட்டு வருவதால் அங்கு முன்னோக்கி செல்வது ரஷிய இராணுவத்திற்கு சவாலாக உள்ளது.

இன்று திங்கட்கிழமை 19 ஆவது நாளாக போர் நீடித்து வரும் நிலையில், கீவ் நகரின் வடமேற்கு புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிழக்குப் பகுதிகளை குறி வைத்து இரவு முழுக்க கடுமையான ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கீவ் நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

கிழக்கு கீவ் நகரின் ப்ரோவெரி பகுதி கவுன்சிலர் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டதாக மண்டல தலைமை நிர்வாகி ஒலெக்சி குலேபா உக்ரைன் நாட்டுத் தொலைக்காட்சியில் தெரிவித்துள்ளார்.

ஒபோலோன்ஸ்கி மாவட்டத்தில் ரஷிய படைகள் பீரங்கியை கொண்டு தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலில் 9 மாடிகள் கொண்ட அடுக்குமாடி கட்டிடத்தில் தீ பற்றி எரிந்தது. 

இந்த தாக்குதலில் இதுவரை யாரும் உயிரிழந்ததாக தற்போது வரை தகவல் இல்லை. அடுக்குமாடி கட்டிடத்தில் தீ ப்பற்றி எரியும் காட்சிகள் அங்குள்ள சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.