நேட்டோ உறுப்பு நாடுகளை ரஷிய படைகள் தாக்கலாம்!! -உக்ரைன் ஜனாதிபதி எச்சரிக்கை-
ரஷியா போலந்து எல்லை அருகே தாக்குதல் நடத்தியதால் நேட்டோ அமைப்புக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி எச்சரிக்கை விடுத்துள்ளார். இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-
நீங்கள் எங்கள் வான் எல்லையை மூடாவிட்டால் உங்கள் (நேட்டோ) குடிமக்களின் மீது தாக்குதல் நடத்தப்படும் நிலை ஏற்படும். போலந்து எல்லையையொட்டி வான் தாக்குதலை ரஷியா நடத்தி விட்டது.
இதனால் நேட்டோவில் உள்ள உறுப்பு நாடுகள் மீது எந்த நேரத்திலும் ரஷியா தாக்குதலில் ஈடுபடலாம். இதனால் நேட்டோ இனியாவது கவனமுடன் செயல்பட வேண்டும் என்றார்.