SuperTopAds

கனடாவில் நடந்த விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி!!

ஆசிரியர் - Editor II
கனடாவில் நடந்த விபத்தில் 5 இந்திய மாணவர்கள் பலி!!

கனடாவின் ஒன்ராறியோ மாகாணம், ரொரன்டோவில் நடந்த வாகன விபத்தில் சிக்கி 5 இந்திய மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விடயத்தை கனடாவுக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அஜய் இன்று உறுதிப்படுத்தியுள்ளார். சனிக்கிழமை இடம்பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாக அஜய் பிசாரியா இன்று காலை ருவிட்டரில் பதிவிட்டுள்ளார். 

இறந்த மாணவர்கள் ஹர்பிரீத் சிங், ஜஸ்பிந்தர் சிங், கரன்பால் சிங், மோஹித் சவுகான் மற்றும் பவன் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ரொரன்டோ பொலிஸார் தெரிவித்துள்ளர். 

ஒன்ட்டின் குயின்ட் வெஸ்ட், நெடுஞ்சாலை 401 இல் வான் - கனரக சரக்கு வாகனம் மோதி இந்த விபத்து இடம்பெற்றது. உயிரிழந்த மற்றும் காயமடைந்த மாணவர்கள் அனைவரும் 21 முதல் 24 வயதுக்கு உட்பட்டவர்களாவர். 

அவர்கள் அனைவரும் கிரேட்டர் ரொரன்ரோ மற்றும் மொன்றியல் பகுதிகளில் தங்கியிருந்து கல்வி கற்றுவந்தவர்கள் என ஒன்ராறியோ மாகாண பொலிசார் மேலும் தெரிவித்துள்ளனர்.