SuperTopAds

உக்ரைன் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் பலி!!

ஆசிரியர் - Editor II
உக்ரைன் துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் பலி!!

உக்ரைனில் நடைபெற்றுவரும் மோதலின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உக்ரைன் மற்றும் ரஷியா இடையேயான போர் தொடர்ந்து இன்று ஞாயிற்றுக்கிழமை 18 ஆவது நாளாக நீடித்து வருகிறது. ரஷிய படைகள் முக்கிய நகரங்களில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. 

அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது. கிழக்கு மற்றும் தெற்கு நகரங்களில் ரஷிய படைகள் மிகப்பெரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளன. அதே நேரத்தில் வடக்கு மற்றும் கீவ் நகரைச்சுற்றியுள்ள பகுதிகளில் போராடி வருகின்றனர். ரஷிய படைகள், கீவ் நகரை சுற்றிவளைக்க தீவிரம் காட்டுகின்றன. 

இந்த நிலையில், உக்ரைனில் போர் தாக்குதல்களுக்கு மத்தியில் அமெரிக்காவை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தார். தலைநகர் கீவின் வடமேற்கு புறநகர் பகுதியான இர்பினில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் அமெரிக்க பத்திரிகையாளர் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.