பிரான்ஸ் அருங்காட்சியகத்தில் இருந்து அகற்றப்பட்ட புதினின் சிலை!! -உக்ரைன் ஜனாதிபதியின் சிலையை வைக்க திட்டம்-

ரஷிய ஜனாதிபதி புதின் மெழுகு சிலை இருந்த இடத்தை உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி பிடிப்பார் என்று அருங்காட்சியக இயக்குனர் யெவெஸ் டெல்ஹோமியோவ் தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் உள்ள கிரெவின் அருங்காட்சியகத்தில் 2000 ஆம் ஆண்டில் ரஷிய ஜனாதிபதி புதினின் மெழுகு சிலை உருவாக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புதினின் மெழுகு சிலை அகற்றப்பட்டுள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை புதினின் மெழுகு சிலை கிடங்கு ஒன்றில் வைக்கப்படும் என்று பிரான் அரசாங்கம் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ஆகியோரின் சிலைகளுக்கு இடையே வைக்கப்பட்டிருந்த புதினின் சிலைக்கு பதிலாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் மெழுகு சிலையை வைக்க அருங்காட்சியகம் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.