SuperTopAds

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து 7ம் திகதி விசேட கலந்துரையாடல்..

ஆசிரியர் - Editor I
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குறித்து 7ம் திகதி விசேட கலந்துரையாடல்..

முல்லைத்தீவு- முள்ளிவாய்க்கால் மண்ணில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வு வழக்கம்போல் இந்த ஆண்டும் மே 18ம் திகதி நினைவுகூரப்படவுள்ளது. இ ந்நினைவுகூரலுக்கான ஒழுங்குகளை இந்த ஆண்டு சகல மாகாணசபை உறுப்பினர்களும் இ ணைந்து மேற்கொள்ளவேண்டும் என முதலமைச்சர் உறுப்பினர்களிடம் கோரியிருக்கின்றார்.

முள்ளிவாய்க்கால் மண்ணில் 2009ம் ஆண்டு இறுதி யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட  மக்களுக்கான நினைவேந்தல் ஒவ்வொரு ஆண்டும் மே 18ம் திகதி நினைவுகூரப்பட்டு வருகின் றது. இதற்கமைய இந்த ஆண்டும் நினைவேந்தலுக்கான ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டிருக்கு ம் நிலையில் கடந்த காலத்தைபோல் அல்லாமல் இந்த ஆண்டு வடமாகாணத்தின் சகல பாகங்களில் இருந்தும் முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அழைத்து வந்து நினைவேந்தலை செய்வதென தீர்மானிக்கப்பட்டிருப்பதாகவும், 

நினைவேந்தலுக்கான ஒழுங்கi மப்புக்களை சகல மாகாணசபை உறுப்பினர்களுக்கும் பகிர்ந்தளித்து அனைவரது பங்களிப்புக் களையும் பெறுவதெனவும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான கலந்துரையாடல் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் யாழ்ப்பாணம் திரும்பிய பின்னர் எதிர்வரும் 7ம் திகதி முதலமைச்சர் தலமையில் நடைபெறவுள்ளதெனவும் அறிய முடிகின்றது. 

மேலும் 7ம் திகதி க லந்துரையாடலுக்கான அழைப்பை முதலமைச்சர் சகல மாகாணசபை உறுப்பினர்களுக்கும், அ மைச்சர்களுக்கும், அவை தலைவருக்கும் அனுப்பியுள்ளதாகவும் அறிய கூடியதாக உள்ளது. இதேவேளை வடமாகாணசபையினால் ஒழுங்கு செய்யப்படும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் தமிழ்தேசிய கூட்டமைப்பு தவிர்ந்த வேறு கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் கலந்து கொள்ளுமா? என சில மாகாணசபை உறுப்பினர்களிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது சக ல கட்சிகளும் ஒன்றிணைந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்யவேண்டும் என பல்கலைகழக சமூகம் கேட்டிருக்கின்றது. 

ஆனாலும் வடமாகாணசபையினால் நடத்தப்படும் நினை வேந்தலில் வேறு கட்சிகள் மற்றும் அமைப்புக்கள் கலந்து கொள்ளுமா? என்பது தொடர்பில் 7 ம் திகதி நடைபெறவுள்ள முதலமைச்சருடனான சந்திப்பின் பின்னரே கூற இயலும் என கூறியிருக்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.