உக்ரைன் போரில் மேலும் பதற்றம் அதிகரிப்பு!! -அதிபயங்கர தெர்மோபேரிக், க்ளஸ்டர் குண்டுகளை வீச ரஷ்யா திட்டம்-

உக்ரைன் நாட்டின் மீது நடத்தப்படும் போரில் க்ளஸ்டர் குண்டுகள், தெர்மோபேரிக் ஆயுதங்கள் என தன்னிடம் உள்ள அதிநவீன மிக மோசமான பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் ஆயுதங்களையும் பயன்படுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
அதன்படி, உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தெர்மோபேரிக் ராக்கெட் லொஞ்சர்களை ரஷ்யா தயார் நிலையில் வைத்துள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
தெர்மோபேரிக் ஆயுதங்கள் வளிமண்டலத்தை சூடாக்கி அங்குள்ள காற்றை கொதிநிலைக்குக் கொண்டு செல்லும். இதனால் தெர்மோபேரிக் ஆயுதத்தின் இலக்கின் கீழ் உள்ள அனைத்து எரிந்துவிடும்.
இந்த வகை ஆயுதம் துல்லியமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் பேரழிவை ஏற்படுத்தக் கூடியது. இதன் தாக்கம் இலக்கைச் சுற்றி 5 முதல் 6 கி.மீ எல்லைக்குள் இருக்கும். அந்த எல்லைக்குள், பதுங்கு குழிகள், சுரங்கங்களில் இருப்போரைக் கூட இந்த குண்டு விட்டுவைக்காதாம்.
போர் விமானத்திலிருந்து வீசப்படும் க்ளஸ்டர் குண்டுகள் இலக்கில் சிறுசிறு குண்டுகளாகப் பிரிந்து விழுந்து வெடித்துச் சிதறும். இது மிகுந்த நாசத்தை ஏற்படுத்தும். இதனால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.