SuperTopAds

6 நாட்களில் ரஷிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டனர்!! -உக்ரைன் ஜனாதிபதி தகவல்-

ஆசிரியர் - Editor II
6 நாட்களில் ரஷிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டனர்!! -உக்ரைன் ஜனாதிபதி தகவல்-

உக்ரைன் நாட்டின் மீதான ரஷிய போர் இன்று புதன்கிழமை 7 ஆவது நாளாக நீடித்து வருகிறது. உக்ரைன் மீதான தாக்குதலை ரஷியா தீவிரப்படுத்தியது. 

ஒரே நேரத்தில் பல முனைகளில் இருந்தும் உக்கிரமான தாக்குதல்களை நடத்த தனது படைகளுக்கு ரஷியா உத்தரவிட்டது. இதை தொடர்ந்து ரஷிய படைகள் முழு வீச்சில் தாக்க தொடங்கி உள்ளன.

இந்நிலையில் கடந்த 6 நாட்களாக உக்ரைன் மீது நடைபெற்று வரும் போரில் ரஷிய வீரர்கள் 6,000 பேர் கொல்லப்பட்டதாக உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஜெலன்ஸ்கி தகவல் தெரிவித்துள்ளார்.