கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் சவால் விட்ட நகைப்புக்குரியவர்..

ஆசிரியர் - Editor I
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் சவால் விட்ட நகைப்புக்குரியவர்..

தமது இருப்பிற்காகவும் பதவிக்காகவும் எவரையும் கொல்லவோ அல்லது வீழ்த்தவோ தயங்கமாட்டார் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்பதனை அவரும் அவரது அணியும் நிரூபித்துள்ளனர் என மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர் சமாசத் தலைவர் யஸ்ரின் சொய்சா தெரிவித்தார்.

இறுதி யுத்தத்தில் என்ன நடந்த்து என எமது தலைவருடன் உடன் இருந்த போராளிகளாலேயே கூற முடியவில்லை. அந்த யுத்தத்தினை நடாத்திய அரசினாலும் களமுனையில் இருந்த எதிரி தரப்பான இராணுவத்தினாலும் இன்றுவரை உறுதிப்படுத்த முடியாமல் சர்வதே வல்லுநர்களின் கேள்விக்குப் பதிலளிக்க முடியாது தின்றுகின்றனர்.

இந்த நிலையில் உலகத் தமிழர் பேரவையின் தலைவரான வணபிதா இமானுவேல் அடிகளார் ஜேர்மனியில் இடம்பெற்ற ஓர் நிகழ்வில் தமிழினத்திற்கு தற்போது தலமை ஓர் வெற்றிடமாக உள்ளது. என ஆற்றிய உரைக்காக அவர் பிரபாகரன் இறந்துவிட்டார் என மறைமுகமாக கூறிய துரோகி என இதே கஜேந்திரகுமாருக்கு கூயா தூக்குபவர்கள் அன்று போர்க்கொடி தூக்கினார்கள் . ஆனால் அதே கஜேந்திரகுமாரின் முக்கிய இருவரான சுபாஸ் மற்றும் அவரது கட்சியின் தலைவர் ஆகியோர் அதே கருத்தினை கூறியுள்ளனர்.

தமக்கு பதவி வேண்டும் என்பதற்காக ஓர் சட்டத்தரணியாக இருப்பவரே இவ்வாறு உரைப்பது உங்கள் பதவி ஆசையினையும் கட்சி வங்குறோத்து நிலமையினையுமே காட்டுகின்றது. நாம் எல்லாம் கடவுளிற்கும் மேலாக நேசிக்கும் எமது தலைவரை இவ்வாறு உரைத்தவர்கள் எம்மண்ணில் இக் கூற்றினை கூறியிருப்பின் சிறை செல்லவும் தயாங்காது தலையில்லாது அனுப்பும் நிலமையே அன்று நிகழ்ந்திருக்கும்

இதே சட்டத்தரணியிடமும் காங்கிரசின் தலைவர் மற்றும் கஜேந்திரகுமாரிடம் நாம் பகிரங்க சவால் விடுகின்றோம். உங்கள் கட்சியில்தான் அதிக சட்டத்தரணிகள் உள்ளனர் எனக் கூறுகின்றீர்களே பிரபாகரன் இறந்து விட்டாரானால் அவரின் மரண சான்றிதழைப் பெற்றுத்தர முடியுமா ?

அவ்வாறு மரண சான்றிதழைப் பெற்றுத்தர முடியாது போனால் அடுத்த கனமே அரசியல் என்ற போர்வையில் மக்களை ஏமாற்றாது உங்கள் பதவிகளைத் துறந்து வெளியேறுங்கள். கூட்டமைப்பு சார் கட்சிகள் தேசயத்தை மறக்கின்றனர்.

 யதார்த்தம் என்ற பெயரில் அரசிற்கு ஒத்தூதுகின்றனர் என உரைத்த நீங்கள் எமது தலைவர் இறந்து விட்டதாக அரசு கூறும் அதே கூற்று உண்மையென மேடை போட்டு அரசிற்கு ஒத்தூதிய துரோகிகள் ஆகிவிட்டீர்கள். உங்களை நம்பி ஓர் மாற்று அரசியலாக உருவெடுப்பீர்கள் என நம்பிய எமது மக்களை ஏமாளிகள் ஆக்கி விட்டீர்கள்.

இந்த நிலையில் உங்கள் கட்சியின் பெயரில் அங்கம் வகிக்கும் ஒவ்வொரு சாதாரண உறுப்பினர்களும் மானமிழந்நவர்களாகவே நாம் பார்க்கின்றோம் . வரலாற்றில் பல வீர அமைப்புகளை உருவாக்கிய தலைவர்கள் பிறந்த யாழ்ப்பாண மாவட்டத்தில் இதனை உரைத்த நிலையில் யாழ்ப்பாண மக்களும் யாழ்ப்பாணத் தலைவர்களும் பொறுமை காப்பதனை எண்ணி மனம் வெதும்புகின்றோம். 

இதனால் எமது மாவட்ட கடற்றொழிலாளர்களை அழைத்துச் சென்று அகில இலங்கை தமிழ்க் காங்கிரசின் அலுவலகத்தினை முற்றுகையிடுவது தொடர்பில் தற்போது ஆராய்ந்து வருகின்றோம். அதற்கு யாழ்ப்பாண மக்களும் எமக்கு ஒத்துழைப்பார்கள் என்றே நம்புகின்றோம்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கணிசமான ஆசணங்கள் எடுத்த மமதையில் இருந்து பேசும் தங்கள் கட்சிக்கு அடுத்து வரும் மாகாண சபை மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களில் மக்கள் முகத்தில் கரியினைப் பூசும்போது இதன் உண்மையினையும் மக்கள் உணர்வையும் புரிந்துகொள்ள முடியும். 

உண்மையில் தமிழீழத் தேசியத் தலைவர் அண்ணன் பிரபாகரனை மதிப்பவர்கள் எவராவது இந்த அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசின் ஊடாக பதவிகளில் அலங்கரிப்பவர்களில் எமது தேசியத்தினையும் தேசியத் தலைவரையும் மதிப்பவர்களாக இருந்தால் தமது பதவிகளைத் தூக்கி எறிந்த பின்பு மக்கள் முன்பாக வர வேண்டும். என்றார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு