உக்ரைன் மீது பெலாரசும் தாக்குதல் நடத்தும்!! -எச்சரிக்கும் அமெரிக்கா உளவுத்துறை-
ரஷியா படைகளுடன் இணைந்து பெலாரசும் உக்ரைன் நாட்டின் மீது தாக்குதல் நடத்தக் கூடும் என்று அமெரிக்கா நாட்டின் உளவுத்துறை எச்சரித்துள்ளது.
உக்ரைன் - ரஷியா இடையிலான விவகாரத்தில் உக்ரைனின் அருகில் உள்ள நாடான பெலாரஸ் ரஷியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து வருகிறது. அதோடு உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷிய படைகளுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறது.
இந்த நிலையில் உக்ரைன் போரில் பெலாரஸ் நேரடியாக பங்கேற்கும் எனவும், ரஷிய படைகளுடன் இணைந்து உக்ரைன் மீது தாக்குதல் நடத்தும் எனவும் அமெரிக்க உளவுத்துறை எச்சரித்துள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அமெரிக்க உளவுத்துறை அதிகாரிகள் தெரிவிக்கையில்:-
உக்ரைன் நெருக்கடியின் தற்போதைய சூழலில் பெலாரஸ் நாடும் ரஷிய இராணுவத்துடன் இணைந்து போரில் ஈடுபட வாய்ப்பு உள்ளது. வரும் நாட்களில் ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தைகளை பொறுத்தது போர் குறித்த முடிவை பெலராஸ் ஜனாதிபதி எடுப்பார் என தெரிகிறது என்றனர்.