SuperTopAds

உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய சதி!! -ரஷிய கூலிப்படையினர் 400 பேர் ஊடுருவியுள்ளதாக தகவல்-

ஆசிரியர் - Editor II
உக்ரைன் ஜனாதிபதியை கொலை செய்ய சதி!! -ரஷிய கூலிப்படையினர் 400 பேர் ஊடுருவியுள்ளதாக தகவல்-

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை கொலை செய்ய அந்நாட்டி தலைநகர் கீவிலில் ரஷிய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையினர் போர் தொடுத்து வரும் நிலையில், தன்னை கொலை செய்வது மூலம் உக்ரைனை வீழ்த்த ரஷியா திட்டமிட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி கூறிவருகிறார். 

இந்த நிலையில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை கொலை செய்ய தலைநகர் கீவில் ரஷிய கூலிப்படையினர் 400 பேர் முகாமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ரஷிய ஜனாதிபதி புதினின் நெருங்கிய கூட்டாளிகளால் இயக்கப்படும் வாக்னர் எனப்படும் போராளிகள் குழு ஆப்பிரிக்காவில் இருந்து கூலிப்படையினரை வரவழைத்து, அவர்கள் மூலம் ஜெலன்ஸ்கியை கொலை செய்வதற்கான திட்டங்களை தீட்டி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.