தொடரும் உக்ரைன்-ரஷியா போர்!! -5 இலட்சம் பேர் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம்-
ரஷிய படைகள் உக்ரைன் மீது இன்று செய்யாக்கிழமை 6 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இராணுவ நிலைகள் மட்டுமின்றி பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளிலும் ரஷிய தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் அரசு குற்றம் சாட்டியுள்ளது.
போர் அச்சத்தால் உக்ரைனில் இருந்து பெண்கள், குழந்தைகள் உள்பட 5 இலட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளதாக ஐ.நா சபையின் அகதிகளுக்கான பிரிவு தெரிவித்துள்ளது.
உக்ரைனில் இருந்து வெளியேறுவோர், போலந்து, ஹங்கேரி, ஸ்லோவாக்கியா, ருமேனியா மற்றும் மால்டோவா ஆகிய நாடுகளில் எல்லைகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர். இதில் அதிகபட்சமாக போலந்து நாட்டு எல்லையில் 2,81,000,பேர் குவிந்துள்ளனர்.
அந்த பகுதியில் நீண்ட வரிசையில் கார்கள் மற்றும் பேருந்துகள் அணிவகுத்து நிற்கின்றன. பலர் நடந்தே எல்லைகளை கடந்து வருகின்றனர். உக்ரைன் ரயில் நிலையத்தில் காத்திருக்கும் மக்கள்
எல்லைகளை கடப்பதற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், உறைபனியில் இருந்து பாதுகாத்து கொள்ள குளிர்கால கோட்டு அணிந்தும், சிறிய சூட்கேஸ்களை எடுத்துக்கொண்டு ரயில்வே ஸ்டேஷனில் ஆயிரக் கணக்கானோர் காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.