SuperTopAds

புட்டினிற்கு இதனை காண்பியுங்கள்!! -6 வயது சிறுமியின் மரணத்தால் மனமுடைந்த மருத்துவர்களின் சீற்றம்-

ஆசிரியர் - Editor II
புட்டினிற்கு இதனை காண்பியுங்கள்!! -6 வயது சிறுமியின் மரணத்தால் மனமுடைந்த மருத்துவர்களின் சீற்றம்-

உக்ரைனைனில் ரஸ்ய படையினரின் எறிகணை தாக்குதலில் காயமடைந்த ஆறு வயது சிறுமி மீட்கப்பட்டு நோயாளர்காவு வண்டியின் உதவியுடன் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டார். 

அந்த சிறுமிக்கு வைத்தியாசலையின் முன் நிறுத்தப்பட்ட நோயாளர்காவு வண்டியில் வைத்தே வைத்தியர்களால் முதல் உதவி சிகிச்சை வழங்கப்பட்டது. அதில் இருந்த சிறுமியின் ஆடையிலிருந்து குருதி வழிந்தவண்ணமிருந்தது, மருத்துவ குழுவொன்று அவரை காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டது, சிறுமியை காப்பாற்றுவதற்கு அவர்கள் போராடினார்கள்.

சிறுமியின் தாயார் நோயாளர் காவுவண்டிக்கு வெளியே அழுதபடி காணப்பட்டார். மேலதிக சிகிச்சைக்காக வழங்க வைத்தியர்கள் அங்கு வந்தனர். சிறுமிவேகமாக உள்ளே கொண்டு சென்றனர் மருத்துவதாதிமார்களும் மருத்துவர்களும் சிறுமியை சுற்றி நின்று சிகிச்சை வழங்கு உயிரை காப்பார பாடு பட்டனர். 

இதனை அங்கிருந்த ஊடகங்களும் கமெராக்களில் விடீயோ பதிவு செய்து கொண்டிருந்தார்கள். 

இதன் போது குறித்த சிறுமிக்கு ஒக்சிசனை வழங்கிக்கொண்டிருந்த மருத்துவர் ஒருவர் சீற்றத்துடன், செய்தியாளரின் கமெராவை நோக்கி திரும்பினார்.

உயிரிழந்த நிலையில் காணப்பட்ட ஆறுவயது சிறுமியை காண்பித்த அவர் இதனை புட்டினிற்கு காண்பியுங்கள், சிறுமிக்காக அழும் தாய் மற்றும் மருத்துவர்களையும் அவருக்கு காண்பியுங்கள் என்று ஆவசத்துடன் தெரிவித்தார்.